23.10.2010 அன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார். மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது. குண்டு வெடிப்பையடுத்து பலத்த காயங்களுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐவரும் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர். 8 வயதான முஜாகிதீன் சர்பான், 5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நசீர், 9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர். காயம் பாரதூரமானதாக இருந்த காரணத்தால் அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒருவரும், திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்னொருவருமாக இரண்டு சிறுவர்கள் தற்போதைக்கு பரிதாபகரமாக ...