23.10.2010 அன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார். |
மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது. குண்டு வெடிப்பையடுத்து பலத்த காயங்களுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐவரும் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர். 8 வயதான முஜாகிதீன் சர்பான், 5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நசீர், 9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர். காயம் பாரதூரமானதாக இருந்த காரணத்தால் அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒருவரும், திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்னொருவருமாக இரண்டு சிறுவர்கள் தற்போதைக்கு பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மற்றைய மூன்று மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமானதாக இருப்பதாகவே திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment