வெள்ளிக்கிழமை, 19 ஒக்டோபர் 2012 23:54 (எம்.பரீத்) கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை கூட்டம் கடந்த 17ஆம் திகதி கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட தீர்மானங்களை - கிழக்கு மாகாணசபை அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்களின் விபரங்கள் வருமாறு: 1. திருகோணமலை பொது வைத்தியசாலை - மாகாண சுகாதார அமைச்சினால் இற்றைவரை நிருவகிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான திருகோணமலை நகரில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை, திருகோணமலை மாவட்டத்தின் மக்களின் நன்மைகருதி எதிர்காலத்தில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இதன் நிருவாகத்தை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 2. கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்...