வெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்;சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்; மதனி தெரிவித்திருப்பதாவது, அறபா என்பது மக்காவில் உள்ள இடத்தின் பெயராகும். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே ஹாஜிகள் அறபா என்ற இடத்தில் கூடுவதால் அந்த நாளைக்கே அறபா தினம் எனப்படும். அத்தகைய அறபா தினத்தில் நோன்பு நோற்கும்படி முழு உலக முஸ்லிம்களையும் நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதன்படிடி எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஹாஜிகள் அறபாவில் கூடுவதால் அந்நாளில் மட்டும் அறபா நோன்பு பிடிப்பதே சுன்னத்தானதாகும். அதனை விடுத்து அடுத்த நாட்கள் அய்யாமுத்தஷ்ரீக்குடைய நாள் என்பதால் அந்நாட்களில் நோன்பு பிடிப்பது ஹறாமானதாகும். ஒரு காலத்தில் அறபாவில் ஹாஜிகள் கூடும் தினம் எப்போது என்பது உலகின் ஏனைய நாடுகளில் உள்ள மக்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தமது ஊர்களில் காணும்; பிறையை வைத்து...