Skip to main content

வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படி அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது

வெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில் 
வேண்டிக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்;சில் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்; மதனி  தெரிவித்திருப்பதாவது, 
அறபா என்பது மக்காவில் உள்ள இடத்தின் பெயராகும். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே ஹாஜிகள் அறபா என்ற இடத்தில் கூடுவதால் அந்த நாளைக்கே அறபா தினம் எனப்படும். அத்தகைய அறபா தினத்தில் நோன்பு நோற்கும்படி முழு உலக முஸ்லிம்களையும் நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதன்படிடி எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஹாஜிகள் அறபாவில் கூடுவதால் அந்நாளில் மட்டும் அறபா நோன்பு பிடிப்பதே சுன்னத்தானதாகும். அதனை விடுத்து அடுத்த நாட்கள் அய்யாமுத்தஷ்ரீக்குடைய நாள் என்பதால் அந்நாட்களில் நோன்பு பிடிப்பது ஹறாமானதாகும்.
ஒரு காலத்தில் அறபாவில் ஹாஜிகள் கூடும் தினம் எப்போது என்பது உலகின் ஏனைய நாடுகளில் உள்ள மக்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தமது ஊர்களில் காணும்; பிறையை வைத்து இதுதான் அறபா தினமாக இருக்கும் என்ற அணுமானத்தின் அடிப்பைடையில் அறபா நாளையும் ஹஜ் பெருநாளையும் எடுத்து வந்தர்கள். அன்றைய இந்த நிலை தவறில்லை. பின்னர் வானொலி கண்டு பிடிக்கப்பட்ட பின் ஊர் என்ற எல்லைக்குள் இருந்த இது விடயம் நாடு என்ற வரையறைக்குள் வந்தது. இப்போது இணையத்தளம், செய்மதி, ஸ்கைப் என தொழில் நுட்பம் முன்Nனேறி விட்டதாலும் அறபா நாள் எப்போது என்பது இப்போதே சகலருக்கும் தெரியும் என்பதாலும் அறபாவில் ஹாஜிகள் கூடுவதை உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனாலும் நேரடியாக காண முடியும என்பதாலும் அந்த வகையில் அரபாவில் முஸ்லிம்கள் கூடும் தினத்தில் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும். அல்லாமல் நமது நாட்டில் தாமதமாதக கண்ட பிiயை வைத்து வேறு தினங்களில் அறபா நோன்பு நோற்பது தெரிந்து உண்மையை கொண்டே வேண்டுமென்று செய்யும் பாவத்தை உருவாக்கும்.
சூரிய கணக்குப்படி உலகம் முழுவதும் ஒநேரநாள் ஒரே திகதியாகும். அதே போல் சந்திர கணக்கப்படி உலகம் முழுவதும் ஒரே நாளில் பௌர்ணமி வருகிறது. ஆனால் சந்திர கணக்குப்படி சஊதியில் 7ம் திகதி என்பது இலங்கை முஸ்லிம்களிடத்தில் 5ம் திகதி என்பது உலக மு;லிம்களை பார்த்து எள்ளி நகையாடுவதாக உள்ளது.
அத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறை கண்டு விடுங்கள் என தனி ஒரு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சொல்லவில்லை. மாறாக முழு உலக முஸ்லிம்களுக்கே கட்டளையிட்டுள்ளதன் மூலம் இன்றைய நமது சூழலுக்கும் எற்றவாறு அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதை காணலாம். அதன்படி உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லாவான மக்கா பிறையை தொடர்வதே நபியின் பொதுவான வார்த்தையிலிருந்து பெறும் வழிகாட்டலாகும்.
ஆகவே வெள்ளிக்கிழமை அறபா நாள் என்பதால் அந்நாளில் அறபா நோன்பு நோற்கும்படியும், பெருநாளை பிற்படுத்துவது பாவம் இல்லை என்பதால் நமது நாட்டு முஸ்லிம்களின் ஒற்றுமை கருதி ஹஜ் பெருநாளை உலமா சபையின் கூற்றுக்கமைய திங்கட்கிழமை கொண்டாடும்படியும் இலங்கை முஸ்லிம்களை அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...