வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்
செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்
வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி
ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு
குறித்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்
வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.

Comments
Post a Comment