ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: டெய்லி டெலிகிராப் ஆய்வு

[ திங்கட்கிழமை, 18 சனவரி 2010, 04:22.02 PM GMT +05:30 ] |
நாடாளுமன்ற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஆய்வு ஒன்றின் மூலம இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என ஞாயிறு டெலிகிராப் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. |
இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு, 53 லட்சத்து 73 ஆயிரத்து 751 வாக்குகள் கிடைத்துள்ளன. இது வாக்களிப்பு வீதத்தில் 48.3 ஆகும். இந்தநிலையில் கிராம மட்டத்தில்,தமக்கு செல்வாக்கு இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது. அதேநேரம் சரத் பொன்சேகாவின் வாக்குவீதம் அதிகரித்து வருவதாக இலங்கையின் வாக்காளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிங்கள வாக்குகள், இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலும் பிரிந்து செல்கின்றன. இந்தநிலையில் 2.5 மில்லியன் தமிழர்களின் வாக்குகள், மொத்த வாக்குகளின் 12.5 வீத வாக்குகள், இரண்டு பேரின் வெற்றியையும் உறுதிசெய்யும் என டெலிகிராப் மேலும் குறிப்பிட்டுள்ளது. |
Comments
Post a Comment