மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குங்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, கேந்திர முக்கியத்துவமான இடங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. புலிகள் துப்புரவாக இல்லவே இல்லை என்று நான் கூறினேன். ஆனால் அதை நீக்கவும், மக்களின் இயல்பு வாழ்வுக்கும் அவர் அனுமதி வழங்க விரும்பவில்லை.
மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கூறினேன். தேர்தல் முடிந்த பின்னர் படிப்படியாக அதனைச் செய்யலாம் என்றார். அதற்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்டேன், அதனை அவர் மறுத்தார்.
Comments
Post a Comment