Skip to main content

தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள்

தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் செய்திகளில் ஊடாக அறிய முடிகின்றது கடந்த மாதம் குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச மெல்சிறிபுர கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை இட நெருக்கடி காரணமாக விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத பௌத்த மத குழு என்று தெரிவிக்கபடும் குழு மஸ்ஜித்தை தாக்கியது மஸ்ஜிதுக்கு சேதங்களை ஏற்படுத்தியது என்ற செய்தியை நாம் அறிவேம்
இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்தன இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? போன்ற விபரங்கள் திரட்டப்படுள்ளன விரிவாக பார்க்க
இதேவேளை கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்று இயங்கிவருகின்றது இந்த சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவியர் இஸ்லாமிய உடையிலான சீருடை அணிந்து பாடசாலைக்கு சென்றுவருகின்றனர் இந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஓட்டபட்டுள்ளதாக தெரியவருகின்றது
அதேபோன்று கண்டி வட்டாரத்தென்னை என்ற பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலையும் தக்கியாவும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது இது பற்றி அறிவிக்கப்பட்டும் செய்தியில் சில மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் வந்த பெரும்பான்மை இன காடையர்கள் தக்கியாவை தாக்கி சேதம ஏற்படுத்தியுள்ளனர் இதை தொடர்ந்து கைதான இவர்கள் கண்டி நீதிமன்ற நீதிபதியால் எச்சரிக்க பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர் இந்த வழக்கில் நீதிபதி தக்கியா நிர்வாகத்தை அங்கு கருமங்களை தொடர்ந்து செய்யுமாறு கூறியுள்ளார் எனிலும் அச்சம் காரணமாக குறித்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலை மற்றும் தக்கியா நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது
அதேபோன்று கடந்த வருடம் நான்காம் மாதம் கண்டி அம்பிட்டிய என்ற பிரதேசத்தில் இயங்கிவந்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலையையும் , மஸ்ஜிதையும் உடன் மூடிவிட வேண்டும் அல்லது உடைத்து தகர்க்க படும் என்று கூறிக்கொண்டு குறித்த மஸ்ஜிதினுள் நுழைந்த பௌத்த தேரர்கள் உட்பட பலர் மஸ்ஜிதின் இமாமை மிக கடுமையாக விரட்டிவிட்டு சென்றனர் இதை தொடர்ந்து போலீஸ் வழக்கு நீதிமன்றம் செலும்வரை அல் குர்ஆன் மாலை நேரபடசாலையை தடை செய்தது
சில வருடங்களுக்கு முன்னர் கண்டி தெய்யன்வய என்ற கிராமத்தில் மஸ்ஜித் ஒன்று தொடர்பாக பலத்த எதிர்ப்பு நிலவியுள்ளது குறித்த மஸ்ஜிதை மூடும்படி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது ஆனால் தெய்யன்வய முஸ்லிம்கள் இந்த பயமுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்து மஸ்ஜிதின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகின்றனர் என்று அறிய முடிகின்றது .
இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக கண்டி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் எதிர் கொள்ள போதுமான ஏற்பாடுகள் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்று கவலை தெரிவிக்க படுகின்றது குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் கணிசமான தொகையாக இருந்தும் மிகவும் சிதறி வாழ்வதால் அவர்கள் , சமைய ,சமூக, அரசியல் விடையங்களில் மிகவும் பாதிப்புகளை எதிர் கொள்கின்றார்கள் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் 90 கும் அதிகமான கிராமங்களில் வாழ்வதாக தெரிவிக்க படுகின்றது ஆனாலும் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாவதில்லை ஆனால் கண்டி மாவட்டம் நான்கு பாராளுமன்ற உறுபினர்களை கொண்டுள்ளது இதில் ஒரு உறுப்பினர் ஆளும் தரப்பு பிரதியமைச்சர் மற்ற மூன்று உறுபினர்களும் எதிர் தரப்பில் இருகின்றார்கள் ஆனால் இவ்வாறான பிரச்சனைகள் கண்டி மாவட்டத்தில் தொடர்கின்றது இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் தீவிரவாத அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் இருப்பதாக அறியமுடிகின்றது எல்லாவற்றையும் சட்ட ரீதியா கையாள்வதை விடவும் பிரச்சனைகளை ஊதி பெரிதுபடுத்தாமல் அரசியல் ரீதியாக அனுகுவதன் மூலம் பெரிய அனுகூலங்களை பெறமுடியும் கண்டி மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்ந்தும் எதிர்தரப்பில் அமைவது இதற்கு சாதகமாக அமையாது என்பது பொதுவான நடைமுறை உண்மை ஆகவே எதிர்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி தமது கட்சிகளுடன் பேசி சமுகத்துக்கு தேவையான போது பொருத்தமான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்
இதேவேளை பிரதமரும் புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான டீ. எம். ஜயரத்ன எதிர்காலத்தில் மத வணக்க தளங்களை கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்றும் இது தொடர்பான சட்ட நடைமுறை விரைவில் கொண்டுவர இருப்தாகவும் தெரிவித்துள்ளார் இந்த சட்ட நடைமுறை கண்டிப்பாக இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு தேவையானது ஆனால் நடைமுறையில் வணக்கத் தளங்களை கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெறுவதில் பாகுபாடுகள் காட்டப்படாமல் இருக்குமானால் இது ஒரு சிறந்த சட்ட நடைமுறையாக அமையும் என்பதுடன் இதனால் முஸ்லிம் , ஹிந்து , கிறிஸ்தவவர்கள் தமது வணக்கத் தளங்களை அமைப்பதை கட்டுபடுத்தும் சட்ட நடைமுறையாக இதனை கருதாது இருக்க அரசு சட்ட நடைமுறையில் கவனமாக இருக்கவேண்டும் அரசு அந்த விடையத்தில் தவறுமாக இருப்பின் இது ஒரு அடக்குமுறை சட்டமாக பார்க்கப்படும் நிலை ஏற்படும் இலங்கையில் தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது
- லங்காமுஸ்லிம்
--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் செய்திகளில் ஊடாக அறிய முடிகின்றது கடந்த மாதம் குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச மெல்சிறிபுர கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை இட நெருக்கடி காரணமாக விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத பௌத்த மத குழு என்று தெரிவிக்கபடும் குழு மஸ்ஜித்தை தாக்கியது மஸ்ஜிதுக்கு சேதங்களை ஏற்படுத்தியது என்ற செய்தியை நாம் அறிவேம்
இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்தன இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? போன்ற விபரங்கள் திரட்டப்படுள்ளன விரிவாக பார்க்க
இதேவேளை கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்று இயங்கிவருகின்றது இந்த சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவியர் இஸ்லாமிய உடையிலான சீருடை அணிந்து பாடசாலைக்கு சென்றுவருகின்றனர் இந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஓட்டபட்டுள்ளதாக தெரியவருகின்றது
அதேபோன்று கண்டி வட்டாரத்தென்னை என்ற பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலையும் தக்கியாவும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது இது பற்றி அறிவிக்கப்பட்டும் செய்தியில் சில மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் வந்த பெரும்பான்மை இன காடையர்கள் தக்கியாவை தாக்கி சேதம ஏற்படுத்தியுள்ளனர் இதை தொடர்ந்து கைதான இவர்கள் கண்டி நீதிமன்ற நீதிபதியால் எச்சரிக்க பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர் இந்த வழக்கில் நீதிபதி தக்கியா நிர்வாகத்தை அங்கு கருமங்களை தொடர்ந்து செய்யுமாறு கூறியுள்ளார் எனிலும் அச்சம் காரணமாக குறித்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலை மற்றும் தக்கியா நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது
அதேபோன்று கடந்த வருடம் நான்காம் மாதம் கண்டி அம்பிட்டிய என்ற பிரதேசத்தில் இயங்கிவந்த அல் குர் ஆன் மாலை நேரபடசாலையையும் , மஸ்ஜிதையும் உடன் மூடிவிட வேண்டும் அல்லது உடைத்து தகர்க்க படும் என்று கூறிக்கொண்டு குறித்த மஸ்ஜிதினுள் நுழைந்த பௌத்த தேரர்கள் உட்பட பலர் மஸ்ஜிதின் இமாமை மிக கடுமையாக விரட்டிவிட்டு சென்றனர் இதை தொடர்ந்து போலீஸ் வழக்கு நீதிமன்றம் செலும்வரை அல் குர்ஆன் மாலை நேரபடசாலையை தடை செய்தது
சில வருடங்களுக்கு முன்னர் கண்டி தெய்யன்வய என்ற கிராமத்தில் மஸ்ஜித் ஒன்று தொடர்பாக பலத்த எதிர்ப்பு நிலவியுள்ளது குறித்த மஸ்ஜிதை மூடும்படி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது ஆனால் தெய்யன்வய முஸ்லிம்கள் இந்த பயமுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்து மஸ்ஜிதின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகின்றனர் என்று அறிய முடிகின்றது .
இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக கண்டி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் எதிர் கொள்ள போதுமான ஏற்பாடுகள் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்று கவலை தெரிவிக்க படுகின்றது குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் கணிசமான தொகையாக இருந்தும் மிகவும் சிதறி வாழ்வதால் அவர்கள் , சமைய ,சமூக, அரசியல் விடையங்களில் மிகவும் பாதிப்புகளை எதிர் கொள்கின்றார்கள் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் 90 கும் அதிகமான கிராமங்களில் வாழ்வதாக தெரிவிக்க படுகின்றது ஆனாலும் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாவதில்லை ஆனால் கண்டி மாவட்டம் நான்கு பாராளுமன்ற உறுபினர்களை கொண்டுள்ளது இதில் ஒரு உறுப்பினர் ஆளும் தரப்பு பிரதியமைச்சர் மற்ற மூன்று உறுபினர்களும் எதிர் தரப்பில் இருகின்றார்கள் ஆனால் இவ்வாறான பிரச்சனைகள் கண்டி மாவட்டத்தில் தொடர்கின்றது இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் தீவிரவாத அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் இருப்பதாக அறியமுடிகின்றது எல்லாவற்றையும் சட்ட ரீதியா கையாள்வதை விடவும் பிரச்சனைகளை ஊதி பெரிதுபடுத்தாமல் அரசியல் ரீதியாக அனுகுவதன் மூலம் பெரிய அனுகூலங்களை பெறமுடியும் கண்டி மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்ந்தும் எதிர்தரப்பில் அமைவது இதற்கு சாதகமாக அமையாது என்பது பொதுவான நடைமுறை உண்மை ஆகவே எதிர்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி தமது கட்சிகளுடன் பேசி சமுகத்துக்கு தேவையான போது பொருத்தமான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்
இதேவேளை பிரதமரும் புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான டீ. எம். ஜயரத்ன எதிர்காலத்தில் மத வணக்க தளங்களை கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்றும் இது தொடர்பான சட்ட நடைமுறை விரைவில் கொண்டுவர இருப்தாகவும் தெரிவித்துள்ளார் இந்த சட்ட நடைமுறை கண்டிப்பாக இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு தேவையானது ஆனால் நடைமுறையில் வணக்கத் தளங்களை கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை பெறுவதில் பாகுபாடுகள் காட்டப்படாமல் இருக்குமானால் இது ஒரு சிறந்த சட்ட நடைமுறையாக அமையும் என்பதுடன் இதனால் முஸ்லிம் , ஹிந்து , கிறிஸ்தவவர்கள் தமது வணக்கத் தளங்களை அமைப்பதை கட்டுபடுத்தும் சட்ட நடைமுறையாக இதனை கருதாது இருக்க அரசு சட்ட நடைமுறையில் கவனமாக இருக்கவேண்டும் அரசு அந்த விடையத்தில் தவறுமாக இருப்பின் இது ஒரு அடக்குமுறை சட்டமாக பார்க்கப்படும் நிலை ஏற்படும் இலங்கையில் தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது
- லங்காமுஸ்லிம்
--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.