ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத்(கபூரி)இன்று காலை வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் மாரடைப்பு காரணாமாக பதுளை வைத்தியவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை அவர் இன்று காலை காலமாகியுள்ளதாக அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத்,கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். பல்வேறு நாடுகளுக்கும் சன்மார்க்க பிரசாரங்களுக்காக விஜயம் செய்து உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்க அறிஞராகவும் இவர் திகழ்ந்தார். தேசகீர்த்தி,தேசமான்ய,கீர்த்திஸ்ரீ,சாம மான்ய,தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார். பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத், தமிழ்,சிங்கள,முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்துக்காக பாடுபட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பெருந்தொகையானோர் கலந்து கொண்ட அவர்களின் ஜனாஸா தொழுகை பதுளை ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றதுடன் ஜனாதிபதி அவர்களால் அனுப்பப்பட்ட விசேட ஹெலிகொப்டர் மூலம் ஜனாஸா கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment