Skip to main content

பிரான்ஸில் நிகாப் தடைச்சட்டம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் ஸர்கோஸி நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடிவிட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் (முஸ்லிம் பெண்கள் தமது கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி தாமே விரும்பி அணியும் ஓர் ஆடை) எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம்.

ஆம் பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வாக்கெடுப்பின்போது சார்பாக 335 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் இடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தடைச் சட்டத்தை யாராவது மீறி பொது இடங்களில் நிகாப் ஆணிந்தவாறு நடமாடினால் தண்டப்பணமாக 1256 பவுன்ஸ்கள் அறவிடப்படும் என்றும் ஆண்கள் தமது பெண்களை நிகாப் அணியுமாறு நிர்ப்பந்தித்தால் அதற்கு 25இ000 பவுன்ஸ்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு ஒரு வருட சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டி வருமென எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஹிஜாப் அல்லது நிகாப் இஸ்லாம் மார்கம் பெண்களது கண்ணியத்திற்காகவும் அவர்களது பாதுகாப்பிற்காகவும் ஏற்படுத்தியவொன்று. பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடா வருடம் இஸ்லாத்தைத் தழுவி வரும் ஆயிரக்கணக்கான பெண்கள் மனமுவந்து இந்த ஹிஜாப் ஆடைக்குள் தம்மைப் பக்குவப்படுத்திக்கொள்கின்றனர். இதில் அவர்கள் அலாதியானதோர் இன்பத்தை உணர்கின்றார்கள். இதில் எந்த ஆணினதும் நிர்ப்பந்தமோ வற்புருத்தலோ இல்லை என்பதுதான் நிதர்சனம். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் இத்தடைச் சட்டத்திற்கெதிராக முஸ்லிம்; பெண்களே குரல் எழுப்புவது இதற்கு தக்க சான்றாக உள்ளது.

சுதந்திரம், முற்போக்குவாதம் என்று கூறிக்கொண்டு இன்று மேற்கு நாடுகளில் பெண்கள் தமது உடல் அங்கங்களை பச்சை பச்சையாக வெளிக்காட்டியவாறு மக்கள் முன் சுற்றித்திரிவதால் அநாச்சாரங்களும் சமூக சீர்கேடுகளும் அதிகரிக்கின்றதே அல்லாமல் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.
--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.