
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மொறிவேவ நல்லகுடியாறு தமிழ் மொழி அரச முஸ்லிம் பாடசாலைக்கு நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள அதிபர் ஒருவரும் நியமிக்கபட்டார் என்ற செய்தியை நாம் அறிவித்திருந்தோம் தற்போது மீண்டும் இந்த முஸ்லிம் பாடசாலைக்கு பழைய முஸ்லிம் பெயர் வைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது எனிலும் சிங்கள அதிபரே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார் என்று அறிய முடிகின்றது
இந்த முஸ்லிம் பாடசாலை 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்த பாடசாலை 1990 புலிகளினால் இந்த பகுதி மக்கள் வெளியேற்றத்துடன் மூடப்பட்டுள்ளது. தற்போது புலிகளின் தோல்வியை தொடர்ந்து மீள் குடியேறிய மக்களுடன் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ள பாடசாலைக்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளதோடு பெயரும் நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக இயங்கிவந்துள்ளது ,தற்போது இந்த பாடசாலையில் 75 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள் இவர்களில் எவரும் சிங்கள மொழி மாணவர்கள் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .என் . தௌபீக் இது தொடர்பாக மாகாண கல்வி அமைச்சின் கவனதிற்கு கொண்டு சென்றதையடுத்து பாடசாலையின் பெயரை முஸ்லிம் பாடசாலை என்று மீட்டும் வைபதற்கு இணக்கம் தெரிவிக்க பட்டுள்ளபோதும் அதிபர் நியமனம் தொடர்பில் ௫௧ வீதமான மாணவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களோ அதே இனத்தை சார்ந்த அதிபர் நியமிக்கப்படவேண்டும் என்ற நியதியை மீறி பாடசாலைக்கு சிங்கள அதிபர் தொடர்ந்தும் கடமையாற்றுவதாக அறிய முடிகின்றது
Comments
Post a Comment