இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், கடந்த 30 ஆம் தேதியன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் நிருபமா யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்து வருகிறார் என்று இலங்கை அயலுறவு துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி திருகோணமலைக்கு விஜயம் செய்த நிருபமா ராவ் கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தன், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள், கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பேசிவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து செயலாளர் நிருபமா ராவ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டுள்ளார்
Comments
Post a Comment