முஸ்லிம் மக்களுடைய நோன்புப் பெருநாள் முடிவடைந்த நிலையில் மூதூர் மக்களின் போக்குவரத்துப் பிரச்சனை மட்டும் இன்னும் முடியவில்லை என்ற விசனம் மூதூர் மக்கள் மத்தியில் உருவெடுத்து இப்பொழுது பெரிதாகி உள்ளது. மூதூருக்கு சொந்தமான கப்பல் சேவையும் நிறுத்தப் பட்டதுடன் கடந்த ஒரு மாத காலமாக சேவையில் இல்லாமல் இருப்பது கவலையை தரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. அத்துடன் மூதூர் ப. நோ.கூ.சங்கத்திட்குச் சொந்தமான படகு ஏலவே சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிருத்தப்பட்டமையால் மக்கள் இறால்குழி பாதை வழியாக பயணிக்கின்றனர். இப்பாதை திருத்தப்பட்டு வருவதாலும் தட்காலிக பாலத்தில் சாதாரண பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும் நோயாளிகள் சிறு பிள்ளைகள் பெண்கள் ஆகியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அரசியல் வாதிகளே உங்களாலும் கவனிக்கப்படா விட்டால் பாவம் வாக்களித்த முஸ்லிம் மூதூர் மக்கள்.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment