மூதூரிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்கு கடல்வழியே கதியென இருந்த மூதூர் மக்களுக்கு தற்போது இறால்குழி வழியாக A15 பாதை திறக்கப்பட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரம் கினாந்திமுனை, பச்சைநூர், கங்கை முறிவு வழியாக கிண்ணியா சூரங்கள் வந்தடையும் மற்றுமொரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது. இது மூதூர் மூன்றாம் கட்டை மலையடி சந்தியிலிருந்து சூராங்கல்லுக்கு சுமார் 13 KM தூரமாகும். தற்போது கொழும்பு செல்லும் வாகனங்கள் அதிகமாக இப்பாதையை பயன்படுத்துவதைக் காணலாம். இப்பாதை நிலவெளியிளிருந்து சம்பூர் வரை போடப்பட்ட மூதூருக்கு குறுக்காக உள்ள ஒரு புதிய பாதை. இப்பாதை போடப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் நிகழ்ந்தாலும் மூதூர் மக்களுக்கு தற்காலிகமாக ஒரு பாதை என்ற ரீதியில் நன்மைபயக்கின்றது. இதன் பின்னணி தொடர்பில் என்ன சுத்துமாத்துக்கள் உள்ளது என்பதற்கு காலம் தான் பதில்.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment