"எவர் கல்விக்கு உதவுகின்ராரோ அவர் மரணிப்பதில்லை" என்ற நபி மொழிகேட்ப நாம் கல்விக்கு உதவ வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மூதூர் கல்வி வளர்ச்சியில் எமது கவனத்தை சற்று நோக்கினால், அது கடந்த காலங்களில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதிலும் மூதூர் மத்திய கல்லூரி சம்பந்தமாக மிக்க ஆராய வேண்டிய தேவை எம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அங்குள்ள தேவைகளை அடையாளம் கண்டு அது சம்பந்தமாக உதவிகளை வழங்க வேண்டும். எம் பிள்ளைகளும் நாளை மூதூரிலே சொந்த இடத்திலே கல்விகற்க நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது சிந்தனைக்காக நான் தரும் சிறிய விடயம்.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment