Skip to main content

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர்.

இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோகங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.
அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோ ரையும் மனம் உருகச் செய்தது.

இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நட வடிக்கை இடம்பெற்றன.

றிசானா நபீக்கின் விடுதலைக்காக எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விடுதலைக்காக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.



றிசானா நபீக் விடுதலை செய்யப்பட வேண்டுமென தந்தை நபீக் சவூதி நாட்டு மன்னர், தனது பிள்ளை பணிபுரிந்த குடும்பத்தார்களிடமும் விடுவிப்புக்கான வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார்

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...