திருகோணமலை மாவட்டத்தில் அடைமழை காரணமாக மூதூர் பிரதேசத்தில் உள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்துக்கு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது
மக்கள் வீடுகளை கைவிட்டும் இடம்பெயர்ந்து இருப்தாகவும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களிலும் நேற்று வெள்ளம் புகுந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் மோசமாக மூதூர் பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான கிண்ணியா, தம்பலகமம், நிலாவெளி, குச்சவெளி, திரியாய் ஆகியனவும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் தாழ்ந்த பகுதிகள் மூழ்கியுள்ளன
Comments
Post a Comment