அண்மையில் மூதூர் பிரதேச சபைக்கு தெரிவான அரசியல் குழு தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அபிவிருத்திப் பணியில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே மக்களின் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து அவற்றை அக்குழு பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறையவே உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது சபைக்கு 80 மில்லியன் ரூபா நெல்சிப் திட்டத்தின் கீழும் 72 இலட்சம் ரூபா மூதூர் மாவட்ட நீதிமன்றிலிருந்தும் கிடைத்திருப்பது இக்குழுவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதற்காக மூதூர் புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்று சபை இயக்கம் போது அபிவிருத்திப் பாதையில் வெற்றி பெறுவதுடன் நீண்ட காலத்திட்டத்தை தூர நோக்காக கொண்டு சபை இயங்க முடியும்.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment