மூதூர் தள வைத்தியசாலையில் கடமை புரிந்த சரோ என்றழைக்கப்படும் தாதி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் மூதூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கர்ப்பத்தை சட்ட ரீதியற்ற முறையில் கலைத்தபோது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவ் விளம்பெண் தற்போது திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
Comments
Post a Comment