மூதூர் ப. நோ.கூ.ச. இயக்குனர் சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இவ் இயக்குனர் சபையில் பட்டித்திடலைச் சேர்ந்த கே. நவநாதன் மாஸ்டர் தலைவராகவும் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த நசுருல்லா என்பவர் உபதலைவராகவும் செயல்பட்டனர். இயக்குனர் சபையானது தனது நிதி நடவடிக்கைகளை உரியமுறையில் பேண வில்லை என்றும் இவை யாவும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்திட்கு ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட வில்லை என்றும் அத்துடன் ப. நோ.கூ.ச. தின் சொத்துக்களையும் வியாபாரங்களையும் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் இச் சபையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சபை ஊழியர்களின் EPF மற்றும் சம்பளம் என்பவற்றையும் சரிவர வழங்கவில்லை என ஊழியர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்தும் செயற்படுத்தும் வண்ணம் அல்- மீனா வித்தியாலய அதிபர் ஜனாப். பசீர் அவர்களிடம் தலைவர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment