Skip to main content

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம்

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே இவ் இடை நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக செயலக வட்டாரம் குறிப்பிடுகின்றது. பெரியபால கிராம சேவையாளராக கடமை புரிந்த எம்.ஏ. எம். பாரிக் அவர்களுடன் இரண்டு உயர் அதிகாரிகளும் இச்சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.    இச்சம்பவத்தில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகளின் வேலை இடை நிறுத்தத்தில் பின்னணி வேறாக இருக்குமோ அல்லது உண்மையில் இவர்களுக்கும் பாரிக் என்பவருடன் தொடர்பு இருக்குமோ என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது. 

எது எப்படி இருப்பினும் இவ் முஸ்லிம் உயரதிகாரிகள் இல்லாத நிலை முஸ்லிம் மக்களுக்கான சேவையில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இது குறித்து பிரதேச சபை உறுப்பினரும் இச் சம்பவத்தை புகார் செய்தவருமான பி.ரி.எம். பைசர் என்பவர் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு "பாரிக் G . S மற்றும் தனக்கு எசிய உயர் அதிகாரிகளை வேலைலிருந்து விளக்குவேன்"   என்று கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டதாக தனது சேவைப்பட்டியலில் சேர்த்துக் கொண்டார். இது தொடர்பான இன்னமொரு விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இதற்காக GS (நிர்வாகம்), SSO மற்றும் FA என்போர் அழைக்கப்பட்டுள்ளனர். இவ்விசாரணைகளை தம்பலகாமம் DS முன்னேடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது.  

மூதூரில் "வேலை செய்ய காசு வாங்குறார் என்று நியாஸ் DS க்கும் பெட்டிசம் தான்' 'வேலை செய்ய காசே வாங்கிறார் இல்ல என்று சரீப் DS க்கும் பெட்டிசம் தான்" என்று பலரும் கூறுவதைப் பார்க்கும் போது மூதூர் மக்கள் தங்களுக்கு ஓர் வேறு மத சகோதரர்கள் நிர்வாகிகளாக வர வேண்டும் என்று விரும்புகிறதோ? என்பது கேள்வியாகின்றது. மூதூர் அபிவிருத்தியில் ஏனையோர்கள் சிந்தித்ததை விட எமது முஸ்லிம் அதிகாரிகள் அதிகமாக சிந்தித்திருக்கின்றார்கள் என்பது கடந்த கால வரலாறு கண்ட உண்மையாகும். 


Comments

  1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1
    பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
    மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..
    *********************************************************************************


    2. *******
    பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    ReplyDelete
  2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.