நோன்பு திறப்பின்போது அவ் விகாரையில் அதான்(பாங்கு) ஒலித்து தொழுகை
நடத்துவதற்கும், நோன்பு திறப்பதற்கான சிற்றுண்டிகள் மற்றும் கஞ்சி
தயாரித்து வழங்குவதற்கும் தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்
நிகழ்வினை நோன்பு நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நோன்புப் பெருநாள் அடுத்த தினத்தில் பிரபல பௌத்த தேரர்களுக்கு
கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பகல் உணவு வழங்குவதற்கு முஸ்லிம்
அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படி அழைப்புக்கள் மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில்
நேற்று(21) நடைபெற்ற பௌத்தம் இஸ்லாம் நட்புறவு அமைப்பின் கூட்டத்திலேயே
விடுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் இஸ்லாமிய
நிலையத்தின் இணைத் தலைவருமான எம்.எச்.முஹம்மத் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்
வேந்தர்கலாநிதி கம்புறுகமகே தேரர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் மற்றும் பெளத்த அமைப்புகளின் செயலாளர்களான சீலா
விக்கிரம , சாஹுல் ஹமீத் முஹமத் மற்றும் உறுப்பினர்கள், ஐனாதிபதி
சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச,
பானலகல தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இவ் கூட்டமைப்பு தம்புள்ள மற்றும் தெஹிவளை பள்ளிவாசல்களில் நடைபெற்ற
சம்பவங்களுக்குப் பிறகே உறுவாக்கப்பட்டது. நேற்று இடம்பெற்ற அமர்வில்
அமைப்பின் கொள்கைகள் மற்றும் பௌத்தம் இஸ்லாம் மதங்கள் பற்றிய இலங்கையில்
புரிந்துணர்வு, மதங்களுக்கிடையே பிரச்சினைகள் நடைபெறாமல் பாதுகாத்தல்,
பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல் போன்ற வழிமுறைகள் ஆராயப் பட்டது
.
கடந்த மாதாத்தில் நான்கு சுற்று கூட்டங்கள் முன்னாள் அமைச்சர்
எம்.எச்.முஹம்மத் தலைமையில் நடைபெற்றுள்ளது.எதிர்வரும் மாதத்தில் ஐனாதிபதி,
பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து இவ் அமைப்பு
பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதாகவும் இக்கூட்டத்தில் தீர்மாணம்
எடுக்கப்பட்டது.
அத்துடன் இவ் அமைப்பின் தீர்மாணங்கள் சட்ட திட்டங்களுகளும் ஐனாதிபதிக்கும்
பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இணைச் செயலாளர் சாஹுல் ஹமீத்
முஹம்மத் தெரிவித்தார் .
Comments
Post a Comment