Skip to main content

மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால்......



சர்­வ­தேச தரத்­தி­லான விசா­ர­ணை­யையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு அறிக்கை கலப்பு நீதி­மன்றம் என்ற பெயரில் வலி­யு­றுத்­தி­யுள்­ளதே தவிர இது சர்­வ­தேச விசா­ர­ ணை­யல்ல என்று தெரி­வித்­துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக நெடுஞ்­சா­லைகள் மற் றும் பல்­க­லைக்­க­ழகக் கல்வி தொடர்­பான அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை வந்த ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனிடம் யுத்தக் குற்­றச்சாட்­டுகள் தொடர்­பாக உள்­ளக விசா­ர­ணை கள் நடத்­தப்­ப­டு­மென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே உறுதி மொழி வழங்­கினார்.
ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டை எடுத்­தது.
ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் இந்த நிலை­பாட்டை எடுக்­கையில் மஹிந்த தோல்வி கண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. புதிய அரசு பத­வி­யேற்­றது. இவ்­வா­றா­ன­தொரு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கா­விட்டால் எமக்­கெ­தி­ராக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­படும் அபா­யமும் காணப்­பட்­டது.

புதிய ஆட்சி எமது அரசு பத­வி­யேற்­றதும் சர்­வ­தேசம் எமக்கு சாத­க­மான நிலைப்­பாட்­டையும் ஆத­ர­வையும் வழங்க ஆரம்­பித்­துள்­ளது. சர்­வ­தே­சத்­துடன் நட்­பு­ற­வுடன் செயற்­பட்டு இப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண நாம் முயற்­சிக்­கின்றோம்.

கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணை­யென்­பது சர்­வ­தேச நீதி­மன்றம் அல்ல. சர்­வ­தேச தரத்­தி­லான நீதி விசா­ர­ணைக்கே ஐ.நா. அறிக்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சர்­வ­தே­சத்­திற்குத் தேவை­யான விதத்தில் விசா­ர­ணை­யென இதனை அர்த்­தப்­ப­டுத்த முடி­யாது. இப் பிரச்­சி­னைக்குத் தீர்வைக் காண்­ப­தற்கு கடந்த ஆட்­சி­யா­ளர்கள் முயற்­சிக்­க­வில்லை.

ஐ.நா. வுக்கு இரா­ணு­வத்­தி­னூ­டாக அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இவ்­வாறு சர்­வ­தே­சத்­துடன் சர்­வ­தி­கா­ர­மாக நடந்து கொண்­டதே தவிர நட்­பு­ற­வுடன் செயற்­ப­ட­வில்லை.

இன்று நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அரசை ஏற்­ப­டுத்திக் கொண்­டதன் மூலம் சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கையை உரு­வாக்­கி­யுள்ளோம்.

சர்­வ­தேச விசா­ர­ணை­யில்­லாமல் உள்­ளக விசா­ர­ணைக்கு வழி ஏற்­பட்­டுள்­ளது. இதன் மூலம் நாட்டையும் எமது படையினரையும் பாதுகாக்க முடியும். அது மட்டுமல்லாது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்ததன் மூலம் தேசியப் பிரச்சினைக்கும் சுமுகமான தீர்வைக்காணமுடியும் என்றும் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.