வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி உருவாக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 08:36.05 AM GMT ]
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம்
தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள்
கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை
ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இரண்டாவது தடவையாக வடமாகாண சபையினர் பட்டதாரிகளை அழைத்துப் பேசியிருந்தனர். இதன்போது இரு பகுதியினருக்குமிடையில் கடுமையான வாய் தர்க்கம் இடம்பெற்று ஒரு வாறாக செயலணி ஒன்றை உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புமாறு மத்திய அரசை கோரும் பிரேரணை சபையில் மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள்: வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் அல்லது எப்போது வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறுங்கள் என்கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாணசபை முன்பாக இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இதனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மாகாணசபைக்குள் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வதாகவும் தாம் பட்டதாரிகளை மறக்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் தமக்கும் தடைகள், நெருக்கு வாரங்கள் உள்ளதாகவும் குறுப்பிட்டதுடன், தம்மால் முடிந்தளவு தொடர்ந்தும் செய்கிறோம் எனவும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
இதன் பின்னரும் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பட்டதாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இரண்டாவது தடவையாக வடமாகாண சபையினர் பட்டதாரிகளை அழைத்துப் பேசியிருந்தனர். இதன்போது இரு பகுதியினருக்குமிடையில் கடுமையான வாய் தர்க்கம் இடம்பெற்று ஒரு வாறாக செயலணி ஒன்றை உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புமாறு மத்திய அரசை கோரும் பிரேரணை சபையில் மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் அல்லது எப்போது வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறுங்கள் என்கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாணசபை முன்பாக இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் வடமாகாணசபையின் 35 வது அமர்வு நடைபெறும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
வடமாகாணசபையின் வாயில் கதவுகளை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்தனர். இதனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மாகாணசபைக்குள் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வதாகவும் தாம் பட்டதாரிகளை மறக்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் தமக்கும் தடைகள், நெருக்கு வாரங்கள் உள்ளதாகவும் குறுப்பிட்டதுடன், தம்மால் முடிந்தளவு தொடர்ந்தும் செய்கிறோம் எனவும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
இதன் பின்னரும் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment