புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இன்று (25) அதிகாலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதற்கமைய புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை சிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் கிபில்லவெவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான
விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment