Skip to main content

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை குறிப்பு.

உலகத்தில் வாழ்கின்ற கோடான கோடி மக்களில் அதிகமான    மக்களின் இலட்சியம்  தனது வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும் என்பதாகவே இருக்கின்றது  அதற்காகவேதான் அநேகமான மக்கள் இன்று   சிறந்த முதலீடாக படிப்பையும் தொழிலையும் மேற் கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் சமூகத்தில்  தானும் தமது குடும்பமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது இது அவர்களின் உரிமையே இதற்காக நாம் அவர்களை குறைகூற முடியாது.
 ஆனால் அவ்வாரான மக்கள் வாழ்கின்ற உலகிலும் கணிசமான மக்கள் சமூகத்தை பற்றியும்  சிந்திக்கிறார்கள் அதற்காக சிலர் தன்னை அர்ப்பணிக்கிறார்கள் தனது செல்வத்தை வாரி வழங்குகிறார்கள் சமூகத்துக்காக குறல் கொடுக்கிறார்கள் அவ்வாறான மனிதர்களை  இன்று வரை உலகமும் நினைவு கூறிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் எதார்சனமான உண்மையுமாகும்
அவ்வாறு சமூகத்தை  பற்றி சிந்திக்க கூடிய ஒரு மா பெரும் தவைராக எமது நாட்டில் பிறந்து மறைந்தவர்தான் மர்ஹூம் அஷ்ரப் என்பதை யாராலும் மறுக்க முடியாது ஆகவேதான்  அவரின் ஆரம்ப கால வாழ்க்கையை நாமும் சற்று ஆராய கடமைப் பட்டு இருக்கின்றோம்  யார் இந்த அஷ்ரப்...?
 இலங்கையில் முஸ்லிம்கள் செலிந்து வாழும் மாகணமான கிழக்கு மாகாணத்தில்  அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் இயற்கை அழகை கொண்ட ஒரு கிராமத்தில் காரியப்பர் எனும் ஒரு பிரபலமான குடும்பத்தில்  1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி பிறக்கிறார் இயற்கையிலயே அனைவருடனும் சுமூகமாக பழகக் கூடிய அஷ்ரப் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த்த ஊரான சம்மாநதுறைப் பகுதியிலயே அல் அஸர் பாடசாலையிலும் பாத்திமா கல்லுரியிலும் பயில்கிறார் அதன் பிற்பாடு தனது உயர் கல்வியை 1961 முதல் 1966 வரை கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில்  பூரணப் படுத்துகிறார்
1969 ஆம் ஆண்டு கொழும்பு சட்டக் கல்லுரிக்கு தெறிவான மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்  அங்கு தனது படிப்பை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து  1974 ம் ஆண்டு சட்டத்தரணியாக  அங்கு  இருந்து வெளியேறுகிறார் அவர் அங்கு படிக்கும் 1970 முதல் 1971 வரையான ஒரு வருட காலப் பகுதியிலும் பல் வேறு வகையான  சாதனைகளையும்  புரிந்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  அதன் பிற்பாடு சட்டத்தரணியாக வெளியாகிய மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தனது சட்டத்தரணி தொழிலை ஒரு பயிற்சியாக ஒரு வருட காலம் கல்முனையில் பணிபுரிகிறார் அதன் பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சென்று தனது பிற்சியை நன்றாக மேற் கொண்டு சட்டத்துறையில் அனுபமிக்க மனிதனாக தன்னை  பூரணப்படுத்திக் கொண்டார்
அதன் பிற்பாடு
1977ம் ஆண்டு திருமண பந்தத்தி்ல் பேரியல் அஷ்ரப்புடன் உடன் இனைந்து கொண்ட மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அதி்ல் அவர்களுக்கு அமான் அஷ்ரப் எனும் மகனும் பிறக்கிறது  அதன் பின்புதான்  சமூகத்தை பற்றி கொன்ஜம் கொன்ஜமாக சிந்திக்க கூடிய எண்ணம் அவரிடத்தில்  மேலோங்குகிறது  அதனை நடை முறைப் படுத்த அப்போது அவருக்கு சில வாய்ப்புக்களும் கிடைத்தது ஆகவேதான்  1977 முதல் 1984 வரையான காலப் பகுதியில் சட்டத்துறை கல்வி ரீதியாக சுவாரஷ்யமாக மக்கள் மத்தியில்  விளிப்புணர்வு  செய்வதற்காக முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னனியில் இணைந்து சட்ட ஆலோசகராக செயற் பட்டார்  தொடர்ந்து சமூகத்தின் மீதான ஆவல் அவரிடம் மேலோங்குகிறது
அவ்வாறான ஒரு காலப் பகுதியில்தான்
1981ம் ஆண்டு செம்டம்பர்  11ம் திகதி  இந்த முஸ்லிம் காங்கிரஸான கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் அன்றைய காலத்தில் காத்தன்குடியில்  தவிசளாராக கடமை புரிந்த மர்ஹூம் ஏ.எம்.அஹமட் அவர்களின் மூலம் அன்றைய காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவராக இருந்தவர்களின் முயற்ச்சிக்கும் மத்தியி்ல்  இந்த கட்சி ஆரம்பிக்கப்படுகிறது அவர்களின் மூலமே இந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  அதன் பின்பு கடந்த ஜந்து வருடங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு அரும் பாடு படுகிறார் ஊர் ஊராக வீடு வீடாக சென்று ஊர் தலைவர்களையெல்லாம்  சந்தித்து கலந்துறையாடுகிறார் ஆனால் அந்த காலமானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினைகள் தலை தூக்கியிருந்த காலம் எங்கு பார்த்தாலும் அச்சமான சூழ் நிலை காணப்பட்டது  குறிப்பாக கிழக்கு மாகணத்தில் முஸ்லிம் தலைவர்கள் தனவந்தர்கள்  சிறுவர்கள்  என்ற பாகுபாடின்றி கேட்பதற்கு நாதி இல்லை என்று சொல்லும் அளவுக்கு  விடுதலைப் புலிகளினால் படு கொலை செய்யப்பட்ட காலம் ஆனால் அவர் இதனையெல்லாம் கண்டு பின் வாங்கவில்லை அல்லாஹ்வின் உதவியால் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்  அவரின் விடா முயற்சியின் விளைவின்  பயனாகத்தான்   ஐந்து வருடங்களின் பின்பு 1986ம் ஆண்டு  நவம்பர் மாதம் முதல் முதலாக முஸ்லிம்களின் தேசிய கட்சியாகஇந் முஸ்லிம் காங்கிரஸானது இலங்கை அராங்கத்தினால்  பிரகடனப்படுத்தப்பட்டது
தொடர்ச்சியாக  1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  கட்சி களமிறங்கி இரண்டு ஆசனங்களை  கைப்பற்றியது அதன் பிற்பாடும் 1994ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் கட்சியானது நாடளாவிய ரீதியில் 7 ஆசனங்களையும்  கைப்பற்றி தேசியப் பட்டியலுடன் 9 ஆசனங்களுன் பாராளுமன்றம் செல்கிறது அவருடைய பாராளுமன்ற காலத்தில்  மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்  கப்பல் துறைமுகம் மீள் குடியேற்றம் புணர்வாழ்வு அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றம் சென்று குறுகிய காலத்திலேயே அவரின் அமைச்சுப்பதவியை வைத்து நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டார் அதன் விளைவாக ஒலுவில் துறைமுகம் மீள் நிர்ணயிக்கப்பட்டது தென் கிழக்கு கல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அதன் மூலம் எமது சமூகம் பாரிய பயனையும்
அடைந்தது இது வரைக்கும் அடைந்தும் கொண்டும் இருக்கிறது எனலாம் நாடளாவிய ரீதியில் இன மத மொழிக்கு அப்பால் பல்வேறு இளைஞ்சர்களுக்கு கொழும்பு க துறைமுகம் ஒலுவில் துறைமுகம் என்று வேளைவாய்ப்பக்களை வாரி வழங்கினார் அது மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் வரலாறு காணாத சேவைகளையும்  செய்தார் ஆகையால்தான் அவர்  இன்று வரை மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார் எனலாம்
இவ்வாறான அவருடைய சமூகம் சார்ந்த அரசியல் போய்க் கொண்டிருக்கும் காலப் போக்கில்தான் அவருடைய மரணமும் நெருங்குகிறது அதுதான்   2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி ஒரு நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக விமானமொன்றில் அவசர அவசரமாக பயணம் மேற்கொள்கிறார் ஏதோ அல்லாஹ்வின் நாட்டத்தினால் விமானம் கேகல்ல மாவட்டத்தில் உள்ள அர்ரணாயக்க எனும்  பிரதேசத்தில் உள்ள மலையோன்றில் மோதுன்டது அதில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள்  தனது 51வது வயதில் அகால மரணமாகிறார் 
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன் ஆனால் அவரின் மரணம் திட்ட மிட்ட கொலையோ அல்லது இயற்கை மரணமோஎன்று தெறியாத புதிராகவே இன்று வரை மறைந்து விட்டது
பல் வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று விருந்த மர்ஹூம்  அஷ்ரப் அவர்கள்   தனக்காக வாழாமல் எம் சமூகத்துக்காக வாழ்ந்து தம் சமூகத்துக்காக அரசியல் முகவரியை பெற்று தந்து தம் சமூகத்துக்காகவே விண்ணில் பறந்து மண்ணுக்கு இறையாகிறார் இந்த மாமனிதர்  ஆகவே நாமும்  அவருடைய மறுமை வாழ்வுக்காக  பிரார்த்தித்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்
யா அல்லாஹ் எம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு வாழ்ந்து மரணித்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கப்ருடைய வாழ்க்கையை சுவர்க்கத்தின்  பூஞ்சோலையாக்குவாயாக நாளை மறுமையில் அவரை எழுப்பும் போது
நபி மார்கள் சஹாபாக்கள்  ஷஹீத்கள் முத்தக்கீன்கள்  சித்திக்கீன்கள் போன்றவர்களுடன்  எழுப்புவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.