(வீடியோ) முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த அசாத் சாலி தனக்கும் தனது குடுபத்துக்கும் துரோகம் இழைக்கமாட்டார் என நான் நம்பினேன் : கண்ணிருடன் மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார்.
அந்த வீட்டில் இருந்த குறித்த பெண்மணியை விசாரணைக்கு உற்படுத்திய போது அவர் தனது சொந்த விருப்பத்தில் அங்கு தங்கியிருப்பதாகவும் அவரை அங்கு எவரும் தடுத்து வைக்கவோ கடத்திவரவோ இல்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் குறித்த பெண்மணி தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மடவளை நியுசுக்கு தெரிவித்திருந்தது.
இது
தொடர்பாக நேற்று ஹிரு தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்திருந்த அசாத் சாலி
குறித்த பெண்மணியை தான் கடந்தவோ தடுத்து வைக்கவோ இல்லை அவர் அவரது வீட்டை
விட்டு சொந்த விருப்பத்தில் வெளியேறியுள்ளதாக பொலிஸ் வாக்குமூலம்
அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் இன்று கொழுப்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார்
அங்கு கருத்து வெளியிட்ட அவர் கடந்த இரண்டு வருடங்களாக அசாத் சாலி கண்டியில்
தேர்தலில் போட்டியிட வந்ததான் பின்னர் தன்னோடும் தான் குடுப்பத்தோடும்
நெருங்கி பழகியதாகவும் அதனை பயன்படுத்தி கொண்டு தனது மனைவியுடன் முறையற்ற
நட்பொன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தற்போது தனது மனைவியை அவரோடு
வைத்துகொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியதுடன் குறித்த வீட்டை தான் தனது
பிள்ளைகள் உறவினர்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்ததாகவும் போலீசார் கடும்
முயற்சி செய்தும் பல மணி நேரங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தனது மனைவியை
போலீசார் வெலிக்கடை போலிசுக்கு அழைத்துவந்தாக குறிப்பிட்ட அவர் தங்களோடு
அசாத் சாலியின் மகள் மற்றும் மனைவியும் இருந்தாக சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்துவெளியிட்ட அவர் ...
முஸ்லிம்களுக்காக
குரல்கொடுத்த அசாத் சாலி தனக்கும் தனது குடுபத்துக்கும் துரோகம்
இழைக்கமாட்டார் என தான் நம்பியதாக கண்ணிருடன் தெரிவித்த அவர் ஆசாத் சாலி
பெண்களை மோசடி செய்யும் முதலாவது தடவை இதுவல்ல என குறிப்பிட்ட இதற்க்கு
முன்னரும் முதல் மனைவியை வீட்டில் வைத்துகொண்டு ஒரு பெரும்பான்மை இன பெண்ணை
திருமணம் செய்து பின்னர் அவர் விவாகரத்து செய்துள்ளதாக
சுட்டிக்கட்டுயுள்ளார்.
குறித்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ் முறைப்பாட்டை செய்த உவைஸ்
அவர்களின் மகன் மகன் ULFATH UWAIS ஆசாத் சாலிக்கு அரசாங்கத்தால்
வழங்கப்பட்டுள்ள பாதுக்காப்பு உத்தியோகத்தர்கள் சம்பவ தினத்தில் தங்களை
மிரட்டியதாகவும் ஆசாத் சாலியின் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள
பாதுக்காப்பு உத்தியோகத்தரே அவரது தாயை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து
வந்தாகவும் இப்படியானவர்களுக்கு அரச பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்குவதை
ஜனாதிபதி மற்றும் பிரதமர் விளக்கிகொள்ளவேண்டும் என கோரிக்கை
முவைத்துள்ளர்.
குறித்த ஊடக மாநாட்டின் முழு விடியோவை விரைவில் எமது இணையதளத்தில் எதிர்பாருங்கள்...
Comments
Post a Comment