அமெரிக்காவில் கார்களுக்கான
புகை வெளியேற்றச் சோதனையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் ஏமாற்று வேலையில்
ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து ஐரோப்பா எங்கிலும் அந்த கார்களின் சோதனை
குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டு நிதி அமைச்சர்
கோரியுள்ளார்.
ஃபோக்ஸ்வாகன் நிறுவன பங்களின் விலையில் இன்றும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பல கார் உற்பத்தி நிறுவனங்களில் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களின் அடிப்படையில் வேறு சிலவற்றின் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
ஃபோக்ஸ்வாகன் கார்களின் புகை வெளியேற்ற தரவுகள் குறித்து தாமும் புலனாய்வு செய்யப்போவதாக தென்கொரியாவும் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment