முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு, பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்காக தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று மிரிஹானையில் உள்ள மகிந்தராஜபக்ஷவின் இல்லத்துக்கு இன்று முற்பகல் 10 அணி அளவில் செல்லவிருந்ததாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் அந்த குழு இன்னும் மகிந்தராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்துக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச ஊடகங்களின் ஊடாக ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்படாமை குறித்து இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.பி.ஜெயசுந்தர ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment