Skip to main content

பாதுகாக்கப்பட வேண்டிய, சிறுவர் உரிமைகள்

(சமூகவியலாளர் : பகுர்டீன் இஸ்ஹாக்)
சமூகத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களும் தனக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டிருப்பதைப் போல சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்களாகத் திகழும் சிறுவர்களும் தங்களுக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டுள்ளனர். சமூகத்திலுள்ளஒவ்வொரு குடிமகனும் சிறுவர்களின் உரிமைகளை மதித்து அவைகளை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டினைக் கொண்டுள்ளனர்.

சமூகத்தில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் துஷ்பிரயோகம் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து தவறுகளையும் குறிக்கும். அந்தவகையில் சிறுவர் துஷ்பிரயோகமானது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக பல்வேறு சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது. எனவே, சமூகமொன்றில் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படும் போது சிறுவர் உரிமையை பாதுகாக்க முடியும் என்பது பல்வேறு சமூகவியலாளர்களின் கருத்தாகும்

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் போன்ற அனைத்து உலக நாடுகள் முழுவதிலும் காணப்படும் ஒரு சர்வதேசத்தின் கவனத்தையீர்த்த பிரச்சினையாக இருந்தாலும்கூட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராக கருதப்படுகின்றனர். அத்தோடு சிறுவர்கள் மற்றவர்களில் தங்கி வாழ்கின்ற 
பலவீனர்களாக காணப்படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் அவர்களால் பராமரிப்போரால் அல்லது பாதுகாவலர்களால் அல்லது சமூக அங்கத்தவர்களால் பாதிக்கப்படும் நிலையாகும். இதற்கமைய சிறுவர்கள் பல்வேறு வடிவங்களில் 
துஷ்பிரயோகங்களுக்கு உள்ளக்கபடுகின்றார்கள்.

1.   உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
2.   உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
3.   உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
4.   புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.

ஒரு குழந்தை மேற்கூறப்பட்ட துஷ்பிரயோகங்களின் வடிவில் ஒன்றின் மூலம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை மூலம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் நிலைசிறுவர் துஷ்பிரயோகமாகும்.

சமூகமொன்றில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமாக தலைவிரித்தாடுகின்றதென்றால் அச்சமூகத்தில் இயங்கும் சமூ நிறுவனங்கள் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தங்களது முழுமையாக பங்களிப்பினை வழங்கவில்லை என நவீன 
சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். அந்த அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில்ஈடுபட்டாலும் சமூகத்தில் உள்ள சமூக நிறுவனங்களான குடும்பம், மத நிறுவனங்கள், கல்வி நிறுவங்கள், சமூக மையஒழுங்கமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பல்வேறு பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குடும்பம் ஒரு சமூதாயத்தில் அடிப்படைக் கூறாகும். சிறுவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்குமான செழிப்பான சூழல் குடும்பமாகும். ஒரு சிறுவனுக்கு குடும்பத்தின் மூலம் கிடைக்கும் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. மாறாக ஒரு சிறுவன் குடும்பத்தில் அன்பற்ற, ஆதரவற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் போது 
அச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய அதிகமான சந்தர்ப்பங்கள் 
காணப்படுவதாக சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் ஆளுமை விருத்தி, அறிவு மற்றும் உள ரீதியான வளர்ச்சியை மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

பொதுவாக சிறுவர்கள் சமூகத்திலிருந்து அடையாளம், பாராட்டு, பாசம், பாதுகாப்பு போன்றவைகளை எதிர்பார்க்கின்றார்கள். மேலும்சிறுவர்கள் சமூகத்திலிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள்இஎதை நிராகரிக்கின்றார்கள் என்பதை சமூகத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களும் புரிந்து சிறுவர்களின் அபிலாசைகள், உணர்வுகள் போன்றவைகளை மதித்து நடக்கும் போது சிறுவர் உரிமைகளை ஒரு சமூகத்தில் பாதுகாக்க முடியும்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு சவாலாக உள்ள அதே வேளை சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படும் போது அவர்கள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்றவகையில் அவர்களது எதிர்காலத்தை சிறப்பாகத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டியது ஒவ்வொரு சமூக நிறுவனங்களின் பொறுப்பாகும். இந்த நிலையில் இன்றைய நவீன சமுதாயத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளும் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலையையும் காணலாம்.

நவீன உலகில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வெறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட அவற்றைத் தாண்டி சிறுவர் துஷ்பிரயோகம் முன்னேறிச்; செல்லும் சந்தர்ப்பங்களையும் அவதானிக்க முடியும். மேற்படி சிறுவர் துஷ்பிரயோகத்தை நீக்கி சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உலகில் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் பல ஏற்பாடுகளை மேற்கொள்வதினைக் காணலாம். இவ்வாறாக சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேற்கூறப்பட்ட சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் அவசியத்தை இன்றைய சமூகம் வேண்டி நிற்கின்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாதொழித்து சிறுவர் உரிமையை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினம் சிறப்பாக ஒவ்வொரு ஒக்டோபர் 01ம் திகதி கொண்டாடப்படுகின்றன.

மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட திகத்தில் மாத்திரம் இவ்வாறான சிறுவர் உரிமையை பாதுகாப்பது தொடர்பான செயற்பாட்டினை வரையறை செய்யாமல் வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்து சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பினையும் கடமையினையும் சமூகத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், சமூக மையஒழுங்கமைப்புக்கள் போன்றவை செயற்படுத்தும் போது சமூகத்தில் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களையும் ஒரு நாட்டின் அபிவிருத்தி பங்காளிகலாக்க முடியும்

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...