Skip to main content

இலங்கையருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சவூதியிடம் இலங்கை கோரிக்கை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 
ரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை 
விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி 
அந்த நாட்டு இஸ்லாமிய சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமது கணவருக்கு துரோகம் செய்ததாக கூறி சாகும் வரை கல்லால் அடித்து தண்டனையை 
நிறைவேற்ற இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்க 
வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டபட்ட நபர் நீதிமன்றத்தில் 4 முறை குற்றத்தை 
ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் 
பணியகத்தின் செய்தித்தொடர்பாளரான உபுல் தேசப்பிரியா.
இருப்பினும் மரண தண்டனையில் இருந்து அவரை மீட்கும் பொருட்டு இலங்கை அரசு 
அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் இருந்து சுமார் 3 லடசம் பேற் மத்திய 
கிழக்கு நாடுகளில் சென்று பணிபுரிந்து வருகின்றதாக மத்திய வங்கியின் தரவுகள் 
தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

மூன்றாம் கட்டை மலையும் மதவெறியும்

மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன. மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்த...