Skip to main content

Posts

Showing posts from July, 2010

பெயர் மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு மீண்டும் முஸ்லிம் பெயர்

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மொறிவேவ நல்லகுடியாறு தமிழ் மொழி அரச முஸ்லிம் பாடசாலைக்கு நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள அதிபர் ஒருவரும் நியமிக்கபட்டார் என்ற செய்தியை நாம் அறிவித்திருந்தோம் தற்போது மீண்டும் இந்த முஸ்லிம் பாடசாலைக்கு பழைய முஸ்லிம் பெயர் வைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது எனிலும் சிங்கள அதிபரே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார் என்று அறிய முடிகின்றது இந்த முஸ்லிம் பாடசாலை 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்த பாடசாலை 1990 புலிகளினால் இந்த பகுதி மக்கள் வெளியேற்றத்துடன் மூடப்பட்டுள்ளது. தற்போது புலிகளின் தோல்வியை தொடர்ந்து மீள் குடியேறிய மக்களுடன் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ள பாடசாலைக்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளதோடு பெயரும் நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக இயங்கிவந்துள்ளது ,தற்போது இந்த பாடசாலையில் 75 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள் இவர்களில் எவரும் சிங்கள மொழி மாணவர்கள் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .என் . தௌபீக் இது தொடர்பாக மாக...

கிழக்கு மாகண குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அமைச்சர் வாரியத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது ஆராய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் 31.05.2010 அன்றும், 2வது ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியிலும், மூன்றாவது கூட்டம் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வரட்சி காலங்களில் ஏற்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அவர்களுக்கான குடிநீரை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.

பிரான்ஸில் நிகாப் தடைச்சட்டம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் ஸர்கோஸி நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடிவிட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் (முஸ்லிம் பெண்கள் தமது கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி தாமே விரும்பி அணியும் ஓர் ஆடை) எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம். ஆம் பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வாக்கெடுப்பின்போது சார்பாக 335 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் இடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தடைச் சட்டத்தை யாராவது மீறி பொது இடங்களில் நிகாப் ஆணிந்தவாறு நடமாடினால் தண்டப்பணமாக 1256 பவுன்ஸ்கள் அறவிடப்படும் என்றும் ஆண்கள் தமது பெண்களை நிகாப் அணியுமாறு நிர்ப்பந்தித்தால் அதற்கு 25இ000 பவுன்ஸ்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு ஒரு வருட சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டி வருமென எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஹிஜாப் அல்லது நிகாப் இஸ்லாம் மார்கம் பெண்க...

வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தினர்

தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. கிழக்கே காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள் ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. இது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது. சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த...

நியாஸ் மௌளவி வபாத்தானார்

ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத்(கபூரி)இன்று காலை வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் மாரடைப்பு காரணாமாக பதுளை வைத்தியவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை அவர் இன்று காலை காலமாகியுள்ளதாக அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத்,கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். பல்வேறு நாடுகளுக்கும் சன்மார்க்க பிரசாரங்களுக்காக விஜயம் செய்து உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்க அறிஞராகவும் இவர் திகழ்ந்தார். தேசகீர்த்தி,தேசமான்ய,கீர்த்திஸ்ரீ,சாம மான்ய,தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார். பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நி...