Skip to main content

Posts

Showing posts from September, 2010

மூதூரிலிருந்து செல்வதற்கு மீண்டும் ஒரு பாதை - நன்மையா? சுத்துமாத்தா?

மூதூரிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்கு கடல்வழியே கதியென இருந்த  மூதூர் மக்களுக்கு தற்போது இறால்குழி வழியாக A15 பாதை திறக்கப்பட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரம் கினாந்திமுனை, பச்சைநூர், கங்கை முறிவு வழியாக கிண்ணியா சூரங்கள் வந்தடையும்  மற்றுமொரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது. இது மூதூர் மூன்றாம் கட்டை மலையடி சந்தியிலிருந்து சூராங்கல்லுக்கு சுமார் 13  KM தூரமாகும். தற்போது கொழும்பு செல்லும் வாகனங்கள் அதிகமாக இப்பாதையை பயன்படுத்துவதைக் காணலாம்.   இப்பாதை நிலவெளியிளிருந்து சம்பூர் வரை போடப்பட்ட மூதூருக்கு குறுக்காக உள்ள ஒரு புதிய பாதை. இப்பாதை போடப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் நிகழ்ந்தாலும் மூதூர் மக்களுக்கு தற்காலிகமாக ஒரு பாதை என்ற ரீதியில் நன்மைபயக்கின்றது. இதன் பின்னணி தொடர்பில் என்ன சுத்துமாத்துக்கள் உ...

மூதூர் கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது

முஸ்லிம் மக்களுடைய நோன்புப் பெருநாள் முடிவடைந்த நிலையில் மூதூர் மக்களின் போக்குவரத்துப் பிரச்சனை மட்டும் இன்னும் முடியவில்லை என்ற விசனம் மூதூர் மக்கள் மத்தியில் உருவெடுத்து இப்பொழுது பெரிதாகி உள்ளது. மூதூருக்கு சொந்தமான கப்பல் சேவையும் நிறுத்தப் பட்டதுடன் கடந்த ஒரு மாத காலமாக சேவையில் இல்லாமல் இருப்பது கவலையை தரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. அத்துடன் மூதூர் ப. நோ.கூ.சங்கத்திட்குச் சொந்தமான படகு ஏலவே சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிருத்தப்பட்டமையால் மக்கள் இறால்குழி பாதை வழியாக பயணிக்கின்றனர். இப்பாதை திருத்தப்பட்டு வருவதாலும் தட்காலிக பாலத்தில் சாதாரண பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும் நோயாளிகள் சிறு பிள்ளைகள் பெண்கள் ஆகியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அரசியல் வாதிகளே உங்களாலும் கவனிக்கப்படா விட்டால் பாவம் வாக்களித்த முஸ்லிம் மூதூர் மக்கள்.

இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் திருகோணமலை விஜயம்

இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், கடந்த 30 ஆம் தேதியன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் நிருபமா யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து  நிலைமைகளை நேரில் அவதானித்து வருகிறார் என்று இலங்கை அயலுறவு துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி திருகோணமலைக்கு விஜயம் செய்த நிருபமா ராவ் கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண  முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தன், அமைச்சர்கள்  மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள், கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக  பேசிவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து செயலாளர் நிருபமா ராவ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளையும்  பார்வையிட்டுள்ளார்