திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள் எதிர் கொள்ளப்படுவதாக முறையிடப்படுகிறது. தரை வழிப்போக்குவரத்துக்களான கந்தளாய் மற்றும் இறால்குழி வழிகள் முடக்கப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கடல் மார்க்கமாக மாத்திரமே உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பயணிகள் நோயாளர்கள் பயனத்திட்கு இவ்விடயம் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் பற்றி கேட்டபோது திருகோணமலை மேலதிக அரச அதிபர் ஏ.நடராசா தெரிவித்தார் தற்சமயம் வெள்ளம் நிலைமை குறைவடைந்த நிலையில் மக்கள் படிப்படியாக வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் . இவர்களுக்கு உடைகள்இ பால்மா, பாத்திரங்கள் என பல்வகை தேவைகள் உள்ளன எனவும் மேலதிக அரச அதிபர் குறிப்பிட்டார் . இதேவேளை அல்லை-கந்தளாய் வீதி வழியாக நான்கு சக்கர உருட்டும் சக்தி கொண்ட வாகனங்கள் மாத்திரம் நேற்றிலிருந்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் மிகவேகமாக கனரக இயந்திரம...