Skip to main content

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதில் சிரமம்

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் மற்றும் பிரதேச செயலாளர்  பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள்  எதிர் கொள்ளப்படுவதாக முறையிடப்படுகிறது. தரை வழிப்போக்குவரத்துக்களான கந்தளாய் மற்றும் இறால்குழி வழிகள் முடக்கப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து கடல் மார்க்கமாக மாத்திரமே உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பயணிகள்  நோயாளர்கள் பயனத்திட்கு இவ்விடயம் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் பற்றி கேட்டபோது திருகோணமலை மேலதிக அரச அதிபர் ஏ.நடராசா தெரிவித்தார் தற்சமயம் வெள்ளம்  நிலைமை குறைவடைந்த நிலையில் மக்கள் படிப்படியாக வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் . இவர்களுக்கு உடைகள்இ பால்மா, பாத்திரங்கள் என  பல்வகை  தேவைகள் உள்ளன எனவும் மேலதிக அரச அதிபர் குறிப்பிட்டார் .
இதேவேளை அல்லை-கந்தளாய் வீதி  வழியாக நான்கு சக்கர உருட்டும் சக்தி கொண்ட வாகனங்கள் மாத்திரம் நேற்றிலிருந்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் மிகவேகமாக கனரக இயந்திரம் மூலம் செப்பனிடப்படுகின்றன என வீதி  அபிவிருத்தி அதிகார சபையின் பொரியியலாளர் கே. சிவகுமார்  தெரிவித்தார் அவர்  நேற்று முன்தினம அவ்வ{தி வழியாக சேருவிலவை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும, சேருவில வெருகல் வரை செல்லமுடியாது. அங்கு இன்னமும் வெள்ளம்  வீதிக்கு குறுக்காக பாய்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...