மூதூர் கபீப் நகர் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 3 பேர் மரணமான சம்பவம் மூதூரை மிகுந்த கவலைக்குள்ளக்கியது. நோன்புடன் இவ்மூவரும் கடல் குளிக்கும் போது தூரத்தில் தெரிந்த வலைக்கம்பை பிடித்திவிட்டு திரும்பும் போது இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பலரது அபிப்பிராயம். இதில் ஜாயா வீதி , மூதூர் .04 எனும் விலாசத்தில் வசிப்பவரும் ஹபீப் நகர் பகுதியில் திருமணம் முடித்தவருமான ஜுனைத் ஷஹி (29 வயது) என்பவரும் முஹம்மது லாபிர் ரிஜான் என்பவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் (இவர்கள் மூதூர் சலித் மௌலவி (நத்வி) அவர்களின் ஓன்று விட்ட சகோதரர்கள் ) மற்றவர் அனைச்சேனையை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தர் நசீரின் மகன் இர்பான். வியாழக் கிழமை பி.ப. 5.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் உடனே ஷஹீயின் மையத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தும் இரவு 8.30 மணி வரை மையத்தை பெற்றுக் கொள்ளமுடியாது போனதை இட்டு பொதுமக்கள் வைத்தியர் Dr. பிரேம் MS மீது விசனம் தெரிவித்தனர். அவரை அணுகியபோது அவர், தான் 6.20 pm மணிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியான லாபீர் JP இன் அறிக்கை பெற்று மையத்தை வழங்குமாறு பணித்ததாகவும் அதனை அறிக்க...