Skip to main content

Posts

Showing posts from October, 2015

சீனக்குடாவில் ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சீனன் குடா பகுதியில் தனது காதுகளுக்குள் கெட் செட்டை வைத்த வண்ணம் புகையிரதம் வருவதறியாது இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது சமூகத்திற்கான பாரிய இழப்பென்பதை விட எமது சமுக இளைஞர்களுக்கு ஓர் பாடமாக அமைகின்றது. மூதூர் நியுஸ் அன்னாருக்கு பிரார்த்தனை செய்வதோடு ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வு செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றது. சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா  பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே மேற்படி ச - See more at: http://www.madawalanews.com/2015/10/18_20.html#sthash.9HPTCqLU.dpuf சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா  பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே மேற்படி ச - See more at: http://www.madawalanews.com/2015/10/18_20.html#sthash.9HPTCqLU.dpuf சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ள...

1 ஆம் திகதி தொடக்கம், ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் பிரதான ரயில் நிலையங்கள்  மற்றும் உப ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை கேட்பது, பாடல் பாடி பணம் கேட்பது  உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் இவ்வாறு  தடைசெய்யப்படவுள்ளது. பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் 

"மனசோடு பாடிய பெண் குயில்கள்" இசைஞானி இசையில்

"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை" இன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி "மாலையில் யாரோ மனதோடு பேச". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது. நம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.  அந்த வகையில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறே...

பாதுகாக்கப்பட வேண்டிய, சிறுவர் உரிமைகள்

(சமூகவியலாளர் : பகுர்டீன் இஸ்ஹாக்) சமூகத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களும் தனக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டிருப்பதைப் போல சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்களாகத் திகழும் சிறுவர்களும் தங்களுக்கென பல்வேறு உரிமைகளைக் கொண்டுள்ளனர். சமூகத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனும் சிறுவர்களின் உரிமைகளை மதித்து அவைகளை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டினைக் கொண்டுள்ளனர். சமூகத்தில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் துஷ்பிரயோகம் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து தவறுகளையும் குறிக்கும். அந்தவகையில் சிறுவர் துஷ்பிரயோகமானது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக பல்வேறு சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது. எனவே, சமூகமொன்றில் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படும் போது சிறுவர் உரிமையை பாதுகாக்க முடியும் என்பது பல்வேறு சமூகவியலாளர்களின் கருத்தாகும் இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்...