Skip to main content

Posts

கட்சிக்குள் பிளவுகள் இல்லாமல் வேட்பாளர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

கட்சிக்குள் பிளவுகள் இல்லாமல் கட்சிப்போராளிகள் விட்டுக் கொடுப்புடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் நிச்சயமாக மூதூரில் இருந்து ஒருவரை மாகண சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யலாம். தற்போது பெருத்த போட்டிக்கு மத்தியில் மூதூரில் இருந்து தெரிவு செய்யப்படும் வேட்பாளர் முன்னெடுத்து செல்லவேண்டிய தேவை உள்ளதால்  மாகண சபை பற்றி நன்கு தெரிந்த திறமைசாலிகளை கவனத்தில் கொண்டு வேட்பாளர் தெரிவு செய்யப்படல் வேண்டும். 

ஜலசமாதியான மூதூர் மக்களின் நினைவுகளும் சமாதியான படகுச் சேவையும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரக் குடா கடலின் தெற்கே அமைந்துள்ள மூதூர், மகாவெலி கங்கையின் சங்கமத்தில் தோல்கொடுத்து நிற்கும் மிக முக்கியமான முதுமை ஊராகும். 1658 இல் வெள்ளையர்களின் கப்பலின் மாலுமியாக இருந்த ரொபட் நொக்ஸ் மூதூர் வழியாக தப்பிச் செல்லும் போது அங்கு அவர் கண்டதாக கூறுபவர்கள், அதற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் திருகோணமலை நகருடன் தங்களின் அன்றாட மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பேனிவந்துள்ளனர். அன்றிலிருந்து A15 பாதை திறக்கும் வரை மூதூர் மக்களின் பிரதான போக்குவரத்து, கடல் மார்க்கமாகவே காணப்பட்டுள்ளது. மாரி, சித்திரை, பௌர்னமி, அமாவாசை என்ற ஒவ்வொரு கடல்கொந்தளிப்புகளுக்கும் மத்தியில் இம்மக்கள் தமது போக்குவரத்தை வத்தை, பாய்க்கப்பல், வெளி இயந்திர சிறிய படகு, இயந்திரப்படகு, கப்பல் என்று நவீன காலம் வரை தமது போக்குவரத்து வாகனத்தை மாற்றியமைத்து, பிரயாணம் செய்ததே தவிர போக்குவரத்து வழிகளை ...

மூதூர் கடலில் 100 பேர் ஜல சமாதி 1993

1993 . ஜனவரி 25 ஆந் திகதி மூதூர் மக்கள் சந்தித்த முதல் சோகம். அன்றைய தினம் திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி புறப்பட்ட படகு கவுண்டதால் 100   கடலுடன் ஜல சமாதியான நிகழ்வு மூதூர் இன்னும் மறக்காத சோகம். 

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம்

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே இவ் இடை நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக செயலக வட்டாரம் குறிப்பிடுகின்றது. பெரியபால கிராம சேவையாளராக கடமை புரிந்த எம்.ஏ. எம். பாரிக் அவர்களுடன் இரண்டு உயர் அதிகாரிகளும் இச்சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.    இச்சம்பவத்தில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகளின் வேலை இடை நிறுத்தத்தில் பின்னணி வேறாக இருக்குமோ அல்லது உண்மையில் இவர்களுக்கும் பாரிக் என்பவருடன் தொடர்பு இருக்குமோ என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.  எது எப்படி இருப்பினும் இவ் முஸ்லிம் உயரதிகாரிகள் இல்லாத நிலை முஸ்லிம் மக்களுக்கான சேவையில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இது குறித்து பிரதேச சபை உறுப்பினரும் இச் சம்பவத்தை புகார் செய்தவருமான பி.ரி.எம். பைசர் என்பவர் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு "பாரிக் G . S மற்றும் தனக்கு எசிய உயர் அ...

மூதூர் ப. நோ.கூ.ச.இயக்குனர் சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

மூதூர் ப. நோ.கூ.ச. இயக்குனர்  சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இவ் இயக்குனர்  சபையில் பட்டித்திடலைச் சேர்ந்த கே. நவநாதன்  மாஸ்டர் தலைவராகவும் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த நசுருல்லா என்பவர்  உபதலைவராகவும் செயல்பட்டனர். இயக்குனர் சபையானது தனது நிதி நடவடிக்கைகளை உரியமுறையில் பேண வில்லை என்றும் இவை யாவும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்திட்கு  ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட வில்லை என்றும் அத்துடன்  ப. நோ.கூ.ச. தின் சொத்துக்களையும் வியாபாரங்களையும் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் இச் சபையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சபை ஊழியர்களின் EPF மற்றும் சம்பளம் என்பவற்றையும் சரிவர வழங்கவில்லை என ஊழியர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.  இதனை தொடர்தும் செயற்படுத்தும் வண்ணம் அல்- மீனா வித்தியாலய அதிபர் ஜனாப். பசீர் அவர்களிடம் தலைவர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மூதூரைச் சேர்ந்த சரோ என்றழைக்கப்படும் தாதி பொலிசாரினால் கைது

மூதூர் தள வைத்தியசாலையில் கடமை புரிந்த சரோ என்றழைக்கப்படும் தாதி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் மூதூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கர்ப்பத்தை சட்ட ரீதியற்ற முறையில் கலைத்தபோது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவ் விளம்பெண் தற்போது   திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.