Skip to main content

Posts

Showing posts from June, 2011

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம்

மூதூர் பிரதேச செயலக ஊழியர்கள் சிலர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் தற்காலிகமாக வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே இவ் இடை நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக செயலக வட்டாரம் குறிப்பிடுகின்றது. பெரியபால கிராம சேவையாளராக கடமை புரிந்த எம்.ஏ. எம். பாரிக் அவர்களுடன் இரண்டு உயர் அதிகாரிகளும் இச்சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.    இச்சம்பவத்தில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகளின் வேலை இடை நிறுத்தத்தில் பின்னணி வேறாக இருக்குமோ அல்லது உண்மையில் இவர்களுக்கும் பாரிக் என்பவருடன் தொடர்பு இருக்குமோ என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.  எது எப்படி இருப்பினும் இவ் முஸ்லிம் உயரதிகாரிகள் இல்லாத நிலை முஸ்லிம் மக்களுக்கான சேவையில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இது குறித்து பிரதேச சபை உறுப்பினரும் இச் சம்பவத்தை புகார் செய்தவருமான பி.ரி.எம். பைசர் என்பவர் தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு "பாரிக் G . S மற்றும் தனக்கு எசிய உயர் அ...

மூதூர் ப. நோ.கூ.ச.இயக்குனர் சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

மூதூர் ப. நோ.கூ.ச. இயக்குனர்  சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இவ் இயக்குனர்  சபையில் பட்டித்திடலைச் சேர்ந்த கே. நவநாதன்  மாஸ்டர் தலைவராகவும் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த நசுருல்லா என்பவர்  உபதலைவராகவும் செயல்பட்டனர். இயக்குனர் சபையானது தனது நிதி நடவடிக்கைகளை உரியமுறையில் பேண வில்லை என்றும் இவை யாவும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்திட்கு  ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட வில்லை என்றும் அத்துடன்  ப. நோ.கூ.ச. தின் சொத்துக்களையும் வியாபாரங்களையும் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் இச் சபையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சபை ஊழியர்களின் EPF மற்றும் சம்பளம் என்பவற்றையும் சரிவர வழங்கவில்லை என ஊழியர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.  இதனை தொடர்தும் செயற்படுத்தும் வண்ணம் அல்- மீனா வித்தியாலய அதிபர் ஜனாப். பசீர் அவர்களிடம் தலைவர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மூதூரைச் சேர்ந்த சரோ என்றழைக்கப்படும் தாதி பொலிசாரினால் கைது

மூதூர் தள வைத்தியசாலையில் கடமை புரிந்த சரோ என்றழைக்கப்படும் தாதி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் மூதூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கர்ப்பத்தை சட்ட ரீதியற்ற முறையில் கலைத்தபோது அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவ் விளம்பெண் தற்போது   திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

மூதூர் பிரதேச சபை அபிவிருத்திப் பணியில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அண்மையில் மூதூர் பிரதேச சபைக்கு தெரிவான அரசியல் குழு தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அபிவிருத்திப் பணியில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே மக்களின் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து அவற்றை அக்குழு பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறையவே உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது சபைக்கு 80 மில்லியன் ரூபா நெல்சிப் திட்டத்தின் கீழும் 72 இலட்சம் ரூபா மூதூர் மாவட்ட நீதிமன்றிலிருந்தும் கிடைத்திருப்பது இக்குழுவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.  இதற்காக மூதூர் புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்று சபை இயக்கம் போது அபிவிருத்திப் பாதையில் வெற்றி பெறுவதுடன் நீண்ட காலத்திட்டத்தை தூர நோக்காக கொண்டு சபை இயங்க முடியும்.      

JICA திட்டத்தின் கீழ் மூதூர் தஹா நகர் மற்றும் தஹா நகர் பள்ளி புனர் நிர்மாணம் வீதி என்பன

JICA திட்டத்தின் கீழ் மூதூர் தஹா நகர் மற்றும் தஹா நகர் பள்ளி வீதி என்பன கடந்த 19. 05. 2011 அன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் வேலைகள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நடைபெறும் என்று உத்தியோக பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ் வேலைகளை m2 லங்கா கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளது. இக்கட்டுமான வேலைகள் திறமையாக நடைபெறுவதை பொதுமக்களாகிய நாம் உறுதிப்படித்திக்கொள்ள வேண்டும். இதே நேரம் மூதூர் சின்னப்பாலம், அந் நஹார் பாலம் என்பன புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் வேதத்தீவு மின்சாரம் திறந்து வைக்கபட்டது.