Skip to main content

Posts

மூதூரிலிருந்து செல்வதற்கு மீண்டும் ஒரு பாதை - நன்மையா? சுத்துமாத்தா?

மூதூரிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்கு கடல்வழியே கதியென இருந்த  மூதூர் மக்களுக்கு தற்போது இறால்குழி வழியாக A15 பாதை திறக்கப்பட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரம் கினாந்திமுனை, பச்சைநூர், கங்கை முறிவு வழியாக கிண்ணியா சூரங்கள் வந்தடையும்  மற்றுமொரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது. இது மூதூர் மூன்றாம் கட்டை மலையடி சந்தியிலிருந்து சூராங்கல்லுக்கு சுமார் 13  KM தூரமாகும். தற்போது கொழும்பு செல்லும் வாகனங்கள் அதிகமாக இப்பாதையை பயன்படுத்துவதைக் காணலாம்.   இப்பாதை நிலவெளியிளிருந்து சம்பூர் வரை போடப்பட்ட மூதூருக்கு குறுக்காக உள்ள ஒரு புதிய பாதை. இப்பாதை போடப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் நிகழ்ந்தாலும் மூதூர் மக்களுக்கு தற்காலிகமாக ஒரு பாதை என்ற ரீதியில் நன்மைபயக்கின்றது. இதன் பின்னணி தொடர்பில் என்ன சுத்துமாத்துக்கள் உ...

மூதூர் கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது

முஸ்லிம் மக்களுடைய நோன்புப் பெருநாள் முடிவடைந்த நிலையில் மூதூர் மக்களின் போக்குவரத்துப் பிரச்சனை மட்டும் இன்னும் முடியவில்லை என்ற விசனம் மூதூர் மக்கள் மத்தியில் உருவெடுத்து இப்பொழுது பெரிதாகி உள்ளது. மூதூருக்கு சொந்தமான கப்பல் சேவையும் நிறுத்தப் பட்டதுடன் கடந்த ஒரு மாத காலமாக சேவையில் இல்லாமல் இருப்பது கவலையை தரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. அத்துடன் மூதூர் ப. நோ.கூ.சங்கத்திட்குச் சொந்தமான படகு ஏலவே சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மார்க்கப் போக்குவரத்து முற்றாக நிருத்தப்பட்டமையால் மக்கள் இறால்குழி பாதை வழியாக பயணிக்கின்றனர். இப்பாதை திருத்தப்பட்டு வருவதாலும் தட்காலிக பாலத்தில் சாதாரண பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும் நோயாளிகள் சிறு பிள்ளைகள் பெண்கள் ஆகியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இது அரசியல் வாதிகளே உங்களாலும் கவனிக்கப்படா விட்டால் பாவம் வாக்களித்த முஸ்லிம் மூதூர் மக்கள்.

இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் திருகோணமலை விஜயம்

இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், கடந்த 30 ஆம் தேதியன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் நிருபமா யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து  நிலைமைகளை நேரில் அவதானித்து வருகிறார் என்று இலங்கை அயலுறவு துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி திருகோணமலைக்கு விஜயம் செய்த நிருபமா ராவ் கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண  முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தன், அமைச்சர்கள்  மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள், கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக  பேசிவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து செயலாளர் நிருபமா ராவ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளையும்  பார்வையிட்டுள்ளார்

பெயர் மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு மீண்டும் முஸ்லிம் பெயர்

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மொறிவேவ நல்லகுடியாறு தமிழ் மொழி அரச முஸ்லிம் பாடசாலைக்கு நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள அதிபர் ஒருவரும் நியமிக்கபட்டார் என்ற செய்தியை நாம் அறிவித்திருந்தோம் தற்போது மீண்டும் இந்த முஸ்லிம் பாடசாலைக்கு பழைய முஸ்லிம் பெயர் வைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது எனிலும் சிங்கள அதிபரே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார் என்று அறிய முடிகின்றது இந்த முஸ்லிம் பாடசாலை 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்த பாடசாலை 1990 புலிகளினால் இந்த பகுதி மக்கள் வெளியேற்றத்துடன் மூடப்பட்டுள்ளது. தற்போது புலிகளின் தோல்வியை தொடர்ந்து மீள் குடியேறிய மக்களுடன் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ள பாடசாலைக்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளதோடு பெயரும் நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக இயங்கிவந்துள்ளது ,தற்போது இந்த பாடசாலையில் 75 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள் இவர்களில் எவரும் சிங்கள மொழி மாணவர்கள் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .என் . தௌபீக் இது தொடர்பாக மாக...

கிழக்கு மாகண குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அமைச்சர் வாரியத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது ஆராய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் 31.05.2010 அன்றும், 2வது ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியிலும், மூன்றாவது கூட்டம் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வரட்சி காலங்களில் ஏற்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அவர்களுக்கான குடிநீரை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.

பிரான்ஸில் நிகாப் தடைச்சட்டம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் ஸர்கோஸி நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடிவிட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் (முஸ்லிம் பெண்கள் தமது கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி தாமே விரும்பி அணியும் ஓர் ஆடை) எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம். ஆம் பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வாக்கெடுப்பின்போது சார்பாக 335 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் இடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தடைச் சட்டத்தை யாராவது மீறி பொது இடங்களில் நிகாப் ஆணிந்தவாறு நடமாடினால் தண்டப்பணமாக 1256 பவுன்ஸ்கள் அறவிடப்படும் என்றும் ஆண்கள் தமது பெண்களை நிகாப் அணியுமாறு நிர்ப்பந்தித்தால் அதற்கு 25இ000 பவுன்ஸ்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு ஒரு வருட சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டி வருமென எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஹிஜாப் அல்லது நிகாப் இஸ்லாம் மார்கம் பெண்க...