Skip to main content

Posts

முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது தேசிய பட்டியல் : இரண்டரை வருடங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக்குக்கு

5 தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் கங்கிராஸ் தேசிய பட்டியலுக்கான நிரந்தர நியமனம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வழங்கப்படும் எனும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முதல் நிரந்தர நியமனம் திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த சனியன்று முதூர் விஜயம் விஜயம் செய்த தலைவர் ஹக்கீம் இரண்டரை வருடங்களுக்கு வழங்கபடவுள்ள   முதலாவது தேசிய பட்டியல்  நியமனம் தொடர்பாக இறுதி தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக் அவர்களுக்கே முதல் இரண்டரை வருடங்களுக்கு தேசிய பட்டியல் நியமனம்  வழங்கப்படவுள்ளதாகவும் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்கள் வன்னிக்கு வழங்கப்படும் என  முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன. முஸ்லிம்  காங்கிராஸ் வசமுள்ள இரண்டாவது  தேசிய பட்டியல் இரண்டரை வருடங்களுக்கு அட்டாலசேனைக்கு வழங்கபடும் எனவும் மிகுதி இரண்டரை வருடங்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் அல்லது  கம்பஹா ,குருநாகல்.கொழும்பு,கல்குடா ஆகிய பிரதேசங்களில்  ஒரு பிரதேசத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

துபாய் விபத்தில் இலங்கையை சேர்ந்த பாஹிம் என்பவர் (வயது 36) வபாத்.

12:33 PM   madawalanews 0    எப்.முபாரக் & மல்லவபிட்டிய நிவ்ஸ்                           துபாய் நாட்டில் கடந்த சனிக்கிழமை(26) மாலையில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹிம் வயது(36) என்ற இளம் குடும்பஸ்தர் உயிழந்துள்ளார்.        (இவர் சில்வர் அப்பா) அவரின் அன்பு மகனாவார் பொருட்கள் ஏற்றிகொன்டு ஒரு வாகனத்தில் பயனித்து கொன்டு இருக்கும் போதே  பின்னால் வந்த டிப்பர் வாகனமொன்று மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.                               இவரின் சடலத்தை துபாயில் நல்லடக்கம் செய்ய இருப்பதாக உரவினா்கள் எங்களுக்கு கூறினார்கள்

புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இன்று (25) அதிகாலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதற்கமைய புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னேஸ்வரம் கிபில்லவெவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் குழு இன்னும் மகிந்த வீட்டுக்கு செல்லவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு, பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று மிரிஹானையில் உள்ள மகிந்தராஜபக்ஷவின் இல்லத்துக்கு இன்று முற்பகல் 10 அணி அளவில் செல்லவிருந்ததாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனினும் அந்த குழு இன்னும் மகிந்தராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்துக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச ஊடகங்களின் ஊடாக ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்படாமை குறித்து இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.பி.ஜெயசுந்தர ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்காவில் ஹாஜிகளிடத்தில் நடாத்தப்படவிருந்த பாரிய சதி மோசடி சவூதி காவல் துறைகளின் அதிரடி நடவடிக்கையால் முறியடிப்பு சம்பவத்தின் விபரம்.

மக்காவில் ஹஜ்ஜின் போது ஹாஜிகளுக்கு வழங்குவதற்காக 70 ஆயிரம் போலியாக உருவாக்கபட்ட  குர்ஆன் பிரதிகள் .அடங்கிய பெரிய ட்ரக் ஒன்றை சவூதி காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர் இக்குறான் பிரதிகளை இஸ்லாமிய ஆய்வு நிலையத்துக்கு உடனடியாக அனுப்பிவைத்துள்ளனர் சாரதியோடு மேலும் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .. பலமுறை இப்படியான சூழ்ச்சிகளை செய்து ஷியாக்கள் தோல்வியடைந்த நிலையில் மற்றுமோர் பாரிய சதி இது எனக்கூறப்படுகிறது . அல்லாஹ்வின் மார்க்கத்தை குழப்ப முயற்சிப்பவர்களை அல்லாஹ் காட்டிக்கொடுக்காமல் இருப்பதில்லை !! -TPT MEDIA- தகவல்: http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150922257437

புது அறிமுகம்.. அனைத்து மொபைல்களிலும் இணைக்கக்கூடிய பென் டிரைவ் வெளியானது.

இதுவரை பென் டிரைவை கணனியில் மட்டுமே உபயோகிக்கும் ஒரு வசதி இருந்த நேரத்தில் சில மொபைல்களிலும் உபயோகிக்கலாம் ஆமா மற்றும் இல்லை என இரட்டை பதில்கள் ஏன் என்றால் அனேக மொபைல்களில் எ எஸ் டி கார்ட் தவிர வேறு ஒன்றும் உபயோகிக்க இயலாது.  இதை எல்லாம் உடைக்கும் வண்ணம் வந்துள்ள புது சான்டிஸ்க் பென் டிரைவ்.  இனிமேல் 150 அடி தள்ளி இருக்கும் கணணி / மொபைல் / டேப்ளேட் என அனைத்திலும் தகவல் புகுத்த எடுக்க ஏதுவாக உருவாகி இருக்கும் இந்த பென் டிரைவ் 16 ஜிபி கெப்பாசிட்டி உள்ளது. இதன் இந்திய சந்தை விலை 4500 - 5200 ரூபாய்கள் என தெரிகிறது. இது 8 உபகரணங்களை ஒரே நேரத்தில் கனெக்ட் செய்யும் திறனும் இதில் படம் இருந்தால் அதை அப்படியே டிவித்திரையில் பார்க்கவும் முடியும். வைஃபை டெக்னாலஜியை இந்த பென்டிரைவ் கொண்டிருப்பதால் எந்த ஒரு உபகரணத்துடன் இது பர்ஃபெக்டாய் வேலை செய்யும் திறன் படைத்தது.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை குறிப்பு.

உலகத்தில் வாழ்கின்ற கோடான கோடி மக்களில் அதிகமான    மக்களின் இலட்சியம்  தனது வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும் என்பதாகவே இருக்கின்றது  அதற்காகவேதான் அநேகமான மக்கள் இன்று   சிறந்த முதலீடாக படிப்பையும் தொழிலையும் மேற் கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் சமூகத்தில்  தானும் தமது குடும்பமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது இது அவர்களின் உரிமையே இதற்காக நாம் அவர்களை குறைகூற முடியாது.  ஆனால் அவ்வாரான மக்கள் வாழ்கின்ற உலகிலும் கணிசமான மக்கள் சமூகத்தை பற்றியும்  சிந்திக்கிறார்கள் அதற்காக சிலர் தன்னை அர்ப்பணிக்கிறார்கள் தனது செல்வத்தை வாரி வழங்குகிறார்கள் சமூகத்துக்காக குறல் கொடுக்கிறார்கள் அவ்வாறான மனிதர்களை  இன்று வரை உலகமும் நினைவு கூறிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் எதார்சனமான உண்மையுமாகும் அவ்வாறு சமூகத்தை  பற்றி சிந்திக்க கூடிய ஒரு மா பெரும் தவைராக எமது நாட்டில் பிறந்து மறைந்தவர்தான் மர்ஹூம் அஷ்ரப் என்பதை யாராலும் மறுக்க முடியாது ஆகவேதான்  அவரின் ஆரம்ப கால வாழ்க்க...