முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது தேசிய பட்டியல் : இரண்டரை வருடங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக்குக்கு
5 தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் கங்கிராஸ் தேசிய பட்டியலுக்கான நிரந்தர நியமனம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வழங்கப்படும் எனும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முதல் நிரந்தர நியமனம் திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த சனியன்று முதூர் விஜயம் விஜயம் செய்த தலைவர் ஹக்கீம் இரண்டரை வருடங்களுக்கு வழங்கபடவுள்ள முதலாவது தேசிய பட்டியல் நியமனம் தொடர்பாக இறுதி தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் பிரதி அமைச்சர் தவ்பீக் அவர்களுக்கே முதல் இரண்டரை வருடங்களுக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்கள் வன்னிக்கு வழங்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன. முஸ்லிம் காங்கிராஸ் வசமுள்ள இரண்டாவது தேசிய பட்டியல் இரண்டரை வருடங்களுக்கு அட்டாலசேனைக்கு வழங்கபடும் எனவும் மிகுதி இரண்டரை வருடங்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் அல்லது கம்பஹா ,குருநாகல்.கொழும்பு,கல்குடா ஆகிய பிரதேசங்களில் ஒரு பிரதேசத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.